இதயம்

தெரியாத போது
தெரிந்து கொள்ள ஆசைப்பட்டடாய்
தெரிந்த போது
தெருவில் விட்டாய்.

உறவாக நீ இருந்தாய்
உள்ளம் பூரித்தது
உதறிவிட்டாய் என்று
உள்ளம் நோகிறது.

வார்த்தைகளால் நேசித்தாய்
வரமாக நான் நினைத்து
உறுதியான உறவென்று
உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

உன் வார்த்தைகளை கேளாது
இதயம் வேகிறது.

Followers