உன்னால்

விடியும் வரை காத்திருந்தேன்
கனவில் நீ வருவாய் என்று!
ஆனால்,
மறந்து விட்டேன் உறங்க
உன் நினைவால்!

ஹைக்கூ

குளிர்சாதன இயந்திரத்தைப்
பழுது பார்த்த தொழிலாளி
சட்டை முழுதும் வியர்வை...

வேதனை ஆனால் உண்மை

பட்டதாரிகளை பட்டியல் இட முடியாது
அவர்களின்
வளர்ந்த தாடிக்கும்
விளக்கம் கூற முடியாது !

வியாபாரம் நடத்த நம்மவர்கள்
எடுத்துக்கொண்ட
பொருள் “கல்வி”
பள்ளிக்கு தேவை
நோட்டு புத்தகங்கள் இல்லை
நோட்டு கட்டுகள் மட்டுமே!

வலது கையில் கையெழுத்து
இடது கையில் கையூட்டு
அரசு அலுவலகத்தில்
அமர்ந்திருக்கும் அவனுக்கு
போதா குறைதான்
பெண்டாட்டி வடிவில்!

கோட்டை முதல்
குடிசை வரை
குள்ளநரிகள்
சுகமாய் சுலபமாய்
சுரண்டுகின்றன.

காவல் நிலைங்களில்
கற்புகள் விலை பேச படுகின்றன

கல்வி சாலைகள் காசுக்காக
கையேந்துகின்றன

நித்தமும் பொதி சுமக்கும் கழுதைகள்
மாநகர பேரூந்து எனும்
பகவான்ங்கள்
படிகட்டில் பார்க்கலாம்
தற்காலிகமாய் உருவாகும்
பாரதத்தின் ஒற்றுமையை !
தொங்கும் தொப்பை வயிற்றில்
முட்டி மோதி
முழுசாய் ஏறினால்
உள்ளே ரசிப்பவர்களின்
கண்கள்
ரவிக்கையில் மட்டுமல்ல
இடையே தெரியும்
இடையிலும் தான்.....

காதல்

காதல் தேசத்தில்
மிச்சம் இருவர்.......
அவள்
காதலித்து தொலைத்தவள்.
இவன்
காதலை தொலைத்தவன்.

தவிப்பு

கனவுபோல் இருந்த வாழ்க்கையில் சுலபமாக எழுதிய கவிதைபோல் ஒருத்தி வந்தாள். புதியன அறிதலும் அறிவன காணலும் இயல்புபோல் காதல் என அதற்கு பெயர் சூட்டி ஒரு நீண்ட பிரிதலுக்கான ஒத்திகை காண்பதுபோல் மூச்சு முட்ட முத்தம் கொடுத்து போய் வருகிறேன் என்று போனவள் இன்று வரை திரும்பி வரவேயில்லை.

நானும் காதலிக்கிறேன்

காதலித்தால் தான்
கவிதை வருமாம்!!

நானும் காதலிக்கிறேன்
கவிதைகளை....

ஆம்,
என் கவிதை காதலி
எனக்கு கிடைக்க‌
எப்பொழுதும் அலைந்து
கொண்டிருகிறேன்
க‌விதைகளை தோன்றவைக்கும்
காத‌லியை தேடி!

இவன்


தேடிச் சோறுநிதந் தின்று -பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

சிந்தனைகள்


சிந்தனைகள் சிதற,
எண்ணங்கள் எங்கோ எகிற,
குமையும் எரிமலையாக,
காத்துக்கொண்டிருக்கிறேன்,
சிறு தூண்டலிலும் வெடியக்கூடிய அந்த கணத்திற்காக

உன் நினைவு


உன்னை மறக்க நினைத்தாலும்,
நினைக்க மறக்கவில்லையென
ஒவ்வோர் இரவும் உணர்த்துகிறது
என் நனைந்த தலையணை!

'விழி ஈர்ப்பு விசை'

ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
உன்னை எனக்குக் காட்டியது

குழந்தைகள்

நேற்றய கவலைகளும், நாளைய பயங்களும் இல்லாத
பிஞ்சு உள்ளங்கள் அழகு

சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்

சொல்லாமல் சொன்னவை


தனிமை
வறுத்தெடுக்கும் நாளில்
சில்லிடும் பனித் துகளாய்
வானிலிருந்து
உன் நினைவுகள்
நெஞ்சில் விழுந்ததாய்
சொல்லியிருக்கிறேன்.

பிறிதொரு நாளில்
கடுங்குளிர் போர்வை விரிக்க
ஓர்
வெப்பத் துளியாய்
என்
உயிரில் விழுந்ததையும்
சொல்லியிருக்கிறேன்.

உன்
பார்வை படும் தூரங்களே
என்
வாழ்வை நடும் தூரங்களென்றும்,

உன்
வார்த்தை விழும் சமவெளிகளே
என்
வாழ்க்கை எழும் சமவெளிகள்
என்றும் சொல்லியிருக்கிறேன்.

காதலிக்கிறேன் என்று
ஏன்
சொல்லவில்லை என்கிறாய்
பிரிவின் விரல் பிடித்து...

அப்பா


என் அப்பாவிற்கு
ஒரு நாளும்
உதவியதில்லை...

ஆனாலும்
என் எல்லா
தேவைகளையும்
அறிந்து
நான் சொல்லும் முன்பே
செய்து தருபவர்...

உன் நினைவுகள்


எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி மறக்கமுடியும்..
.

It's Because Of You


From the sadness that's hiding inside me
behind those rivers that flows in my eyes
all the happiness that's ruined by sorrows
and all the nights filled with incubus

Dark past keeps on flashing back
forcely matured by insane expiriences
a life that's full of sadness
I'm strugling for it,looking for happiness

How come I'm still alive?
still fighting for this meaningless life
maybe It's because of you
completing my damn, useless life...

Followers