ஒவ்வொரு இரவும்
நீ வந்து
தாலாட்டினாலும்
ஒரு நொடியில் - என்
மனதை உடைத்தவன்- நீ
உனக்காக உருகியது
என்னிதயம்...
இதயங்கள் ஒன்றாக
சேர்ந்த பின்
அன்பின் பரிமாணங்கள்
பல வடிவில் தந்தாய்...
நிரந்தரமாக நீ வேண்டும்
எனக்கு...
என் மனதை பிடித்தாட் போல்
உடலையும் பிடித்தாய்...
மறவாமல் - உன்
அன்பினை வாரி வழங்குகிறாய்
என்னால் முடியவில்லை...
நம் உறவுக்கு
உயிரூட்ட முடியவில்லை...
உன் உறவு வேண்டும்
என் உயிருள்ளவரை...
என்றும் காத்திருபேன்
உனக்காக...
No comments:
Post a Comment