உனக்கான என் கவிதைகள்


உதிர்ந்த சருகுகளாய்
உடைந்துபோன என்
இதயக் குவியல்கள்
கொளுத்திவிட்டு போகிறது
உனதிரு விழிகள்.

கோடி நட்சத்திரங்கள்
இருந்தாலும்
நிலவில்லாத வானம்
நீ இல்லாத
நாட்களில் நான்.

பகல்நேர நிலவு
இரவுநேர மழை
நீரற்ற அருவி
எப்படி எல்லோராலும்
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்..

No comments:

Followers