
உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்
திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் சற்றே அடைந்திருக்கலாமென
அடைந்திருந்த கணங்களிலோ
அதற்கு மேல் அடைய எதுவுமே இருந்திருக்கவில்லை
இழப்பின் கணங்கள்
இந்தக் குளிர் இரவில்
தின்று வாழ்கின்றன
அடைதலின் கணங்களை
உணர்வுகளையும் நிகழ்வுகளையும் சொற்களாய்ச் சேமிக்கும் முயற்சியில் முதல் முறையாய்....
என்னை பெற்ற என் அன்னைக்கு.....
No comments:
Post a Comment