கனவுகள்


வியாபித்து இருந்தன
என் கனவுகள் புவனமெங்கும்
என்று உன்னை கண்டேனோ
அன்று முதலாய்
முகவரி கூட அறியா
உன் நினைவுகளுடனே
முடங்கி போயின அவை

வாகன நெரிசலில் கூட
பறந்து செல்லும்
பட்டாம் பூச்சியாய்
எங்கும் உன்னை
தேடி தொலைகிறது
என் மனம்!

என் வாழ்க்கை திருப்பத்தில்
தேடாமலே கிடைத்தாய்!
கிடைத்தும் தொலைத்தேன்!
தொலைத்தும் தேடுகிறேன்!
தேற்றம் அடைய முயன்று
மறுபடி தோற்கிறேன்
என்னிடமே நான்!

என் இதய தோட்டத்தில்
காதல் மொட்டுக்கள்.
தவிப்பு எனும் நெருப்பில்
ஜனகனின் மகளாய்
தினம் தினம்
தீ குளிக்கிறது என் மனம்
பூக்க துடிக்கும் அவைகளுக்கு
கண்ணீர் அல்ல
தரிசனம் என்னும்
தண்ணீர் ஊற்றி விட்டு போ
உயிர் பெற்று விடும்!

No comments:

Followers